3402. |
ஞால மளித்தவனும் மரி யும்மடி |
|
யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி
னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ
டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர
மேத்துமினே. 9 |
9.
பொ-ரை: இப்பூவுலகைப் படைத்த பிரமனும்,
திருமாலும்,பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து
காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ
பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
ஞாலம் - பூமி, அளித்தவன் - படைத்தவன், ஏல -
பொருத்தமாக, ஏத்து மின் - துதியுங்கள்.
|