3408.
|
அரவமே
கச்சதாக வரைத் தானலர் |
|
கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை
மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர்
புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட
மொற்றியூரே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமான் இடையிலே பாம்மைப் கச்சாக
அணிந்தவர். கொன்றை மலர்மாலை அணிந்தவர். வெண்ணிற
முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை
உடையவர். எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை
வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல்
கங்கையைத் தாங்கியவர். அவர் வீற்றிருந்தருளும் இடம்
திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
அசைத்தான் - கட்டியவன். விரையார்வரைமார்பன்
- கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பையுடையவன். பரவுவார்
பாவம் எல்லாம். பறைத்து - ஓட்டி. பரவுவார் பாவம் பறைக்கும்
அடி என்ற அப்பர் வாக்கிலும் (திருமுறை 6) இத்தொடர்
பயில்கிறது. உரவுநீர் - உலாவும் நீர் (சீவகசிந்தாமணி) - கங்கை.
ஏற்ற - தாங்கிய. பெம்மான் -பெருமான்.
|