| 
         
          | 3411. | நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொடு |   
          |  | நன்மையாலே கன்றனார் மும்மதிலுங் கரு மால்வரை
 யோசிலையாப்
 பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந்
 தாரழலம்
 பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட
 மொற்றியூரே.                       7
 |        7. 
        பொ-ரை: உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான்,
 உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும்,
 பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு
 அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர். நெடிய
 சுடலைப்பொடியாகிய நீற்றிணை அணிந்தவர். அப்பெருமான்
 வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        உள்ளம் - உள்ளத்தில். நன்றியால் - பிறருக்கு உபகாரம் ஆம் தன்மையோடு. வாழ்வது - வாழவேண்டுமென்பதை,
 உலகுக்கு - உலகத்துக்கு. ஒரு நன்மையாலே - நல்லது என்னும்
 நோக்கத்தினால். உலகுக்குத் தீமை செய்த திரிபுரங்களை அழித்தார்
 என்றது இடை இரண்டடிகளின் கருத்து. கன்றினார் - தீமை
 செய்வோர்களாகிய அசுரர்கள். கரு - பெருமைதங்கிய. மால் -
 பெரிய, வரையேசிலையா - மலையே வில்லாக. பொன்றினார் -
 பொன்றுவிப்பாராகி ( பொன்றுதல் - சாதல்) அழல் அம்பு
 ஒன்றினால் - அக்கினியாகிய ஒரு பாணத்தினால். எய்த - எய்து
 அழித்த பெம்மான். வார் - நெடிய, சுடலைப்பொடி நீறணிந்தாரும்;
 மும்மதிலும் பொன்றுவிப்பராகி அழல் அம்பு எய்த பெம்மானுமாகிய
 சிவபிரான் உறையும் இடம் ஒற்றியூரே எனக்கொண்டு கூட்டுக.
 பொன்றினார், பிறவினை விகுதி குன்றியது, முற்றெச்சம்;
 காலவழுவமைதி.
 |