3412. |
பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு |
|
மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன்
மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு
மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட
மொற்றியூரே. 8 |
8.
பொ-ரை: பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான்,
செய்கையால் அறிவில் பெரியவனாவான். கலைமானின் தோசை
சுற்றி உடுத்தவன். சுத்தி, சூலம் எனபன ஏந்தியவன். நெற்றிக்கண்
உடையவன். கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை
மலையைப் பெயர்த்து எடுக்க, அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு
தன் காற்பெருவிரலை அழுத்தியவன். உலகம் முழுவதையும்
ஆட்கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பெற்றி - தன்மை, பித்தனொப்பானாயினும்,
செய்கையால் அறிவிற்பெரியானாவான் என்பார் பெருமான் என்றார்.
சுற்றியான் - சுற்றியுடுத்தவன், சுத்தி - இப்பியாலாகிய பொக்கணமும்,
சூலம் - சூலமும், (கையில் விளங்க) சுடர்கண் - அக்கினியாகிய
கண், நுதல்மேல் விளங்க - நெற்றியின் மேல் விளங்க, நுதல்மேல்
விளங்க என்ற சொல்லாற்றலால் கையில் விளங்க என்பதும்
பெற்றாம். தெற்றி - உதை, தெற்றியால் - உதையால், ஒற்றியான் -
அழுத்தினவன், ஒற்றியான்முற்றும் ஆள்வான் உலகம் முழுவதையும்
ஒற்றிகொண்டு ஆள்வான் என ஒரு பொருள் தோன்றிற்று.
|