3421.
|
வேதமாய்
வேள்வியாகி விளங் கும்பொருள் |
|
வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல
லாவதொன்றே
சாதியான்
மிக்கசீராற் றகு வார்தொழுஞ்
சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி
யமர்ந்தவனே. 6 |
6.
பொ-ரை: இறைவன் வேதங்களை அருளி வேதப்
பொருளாகவும் விளங்குபவன். எரியோம்பிச் செய்யப்படும் வேத
வேள்வியாகவும், ஞானவேள்வியாகவும் திகழ்பவன்.
ஒண்பொருளாகவும், வீடுபேறாகவும் உள்ளவன். சோதிவடிவானவன்.
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
விளங்குபவன். இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால்
சொல்லவும் ஆகுமோ? அத்தகைய சிறப்புடைய பெருமான்,
தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில்
ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
பொருள்வீடு - பொருளாகிய வீடு.
சொல்லலாவதொன்றே - புகழ்ந்து சொல்லக்கூடிய ஒருசெயலாகுமோ.
ஆதியாய் - முதல்வனாகி.
|