3423. |
பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் |
|
பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும்
வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற்
சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி
யமர்ந்தவனே. 8 |
8.
பொ-ரை: இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை
வீணையில் மீட்டிப் பாடுவான். பரமயோகி அவன். மலையரசன்
மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டவன். அப்பெருமான் குளிர்ச்சி பொருந்திய வெண்ணிற
சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த
திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி, திருஅயவந்தி என்னும்
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
பயில்வான் - பயின்றவனாகிய. ஓர் பரம யோகி -
ஓர் மேலான யோகியே. மகள்பாகமும் வேண்டினை ஒரு நயம்.
அண்ணலாய் - தலைவனாகி.
|