3432. |
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி |
|
யாற்றயலே
தழைவளர் மாவினல்ல பல வின்கனி
கள்தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த சூழ கன்குட
மூக்கிடமா
இழைவளர் மங்கையோடு மிருந் தானவ
னெம்மிறையே. 6 |
6.
பொ-ரை: முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக்
கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின்
பக்கத்திலே, தழைகள் மிகுந்த மாங்கனிகளும், பலாவின் கனிகளும்
கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும்
திருத்தலத்தில், அழகான சிவபெருமான், நல்ல ஆபரணங்கள்
அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானே
யாம் வணங்கும் கடவுளாவான்.
கு-ரை:
கழை - மூங்கிலினின்று. வளர் - மிகுதியாகக்
கிடைக்கும். கவ்வை - பெருவிலையையுடைய, கமழ்கின்ற -
கலவைச்சாந்து பூசிய பெண்கள் ஆடிய நீர்த்துறையில்
தெறிக்கப்பட்டமையின் முத்துக்களும் கமழ்கின்றன. தழைவளர் -
தழைகள் மிகும். தயங்கும் - விளங்கும். குழை - கொழுந்து. இழை
- ஆபரணங்கள். வளரும் - மிகும். மாவின் - மாமரத்தின்.
|