| 
         
          | 3434. | நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் |   
          |  | கன்னுடலைப் படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக்
 கீழடர்த்தான்
 கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட
 மூக்கிடமா
 இடுமண லெக்கர்சூழ விருந் தானவ
 னெம்மிறையே.               8
 |  
       
            8. 
        பொ-ரை: நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ்
 அடர்த்த பெருமானாய், வளைந்த மடல்களையுடைய தென்னை
 மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும்
 திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும்
 சிவபெருமானேயாம் வணங்கும் கடவுளாவான்.
       கு-ரை: 
        இடர்கண்டு - துன்பப்பட்டு, அயர - தளர, அடர்த்தான். கொடு - வளைந்த, மணல் எக்கர் - மணல் திடல்.
 |