3436. |
மூடிய சீவரத்தார் முது மட்டையர் |
|
மோட்டமணர்
நாடிய தேவரெல்லா நயந் தேத்திய
நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடை யான்குட
மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ
னெம்மிறையே. 10 |
10.
பொ-ரை: மஞ்சட் காவியுடையணிந்த, இறைவனை
உணராத பேதையராகிய புத்தர்களும், இறுமாப்புடைய சமணர்களும்,
கூறுவன பயனற்றவை. தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி
வழிபட, அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான்,
மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி
அருள்புரிவான். திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ்
விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்
பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.
கு-ரை:
மூடிய சீவரத்தார் - சீவர ஆடையைப் போர்த்தவர்.
முதுமட்டையர் - மிக்க பேதையராகிய புத்தர். மோட்டு அமணர் -
இறுமாப்புடைய அமணர். ஏடு அலர் - இதழ்விரிந்த.
|