3440. |
சந்திர சேகரனே யரு ளாயென்று |
|
தண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்க
டொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழ
வோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம்
வக்கரையே. 3 |
3.
பொ-ரை: சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள
சிவபெருமானே! அருள்புரிவீராக என்று குளிர்ந்த விண்ணுலகத்தில்
விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற,
அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும்
அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர
மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும்
கு-ரை:
சேகரன் - முடியை யுடையவன். அந்தரம் -
ஆகாயத்திலே (திரிந்த.) முப்புரம் வளைத்தான் - வளைத்து எய்தான்.
|