| 3442. |
ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும் |
| |
பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ்
சூடிநல்ல
இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும். மானன
மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்க ளெரி செய்த
தலைமகனே. 5
|
5.
பொ-ரை: பன்றியின் கொம்பும், ஆமையின் ஓடும்
அணிகலனாகக் கொண்டு, வளைந்த பிறைச்சந்திரனையும், குளிர்ந்த
ஊமத்த மலரையும் சூடி, நல்ல மான்போன்ற மென்மையான
விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின்
முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான்.
கு-ரை:
ஏனம் - பன்றி. ஆமையும் - ஆமையோடும்.
பூண்டு - அணிந்து. அதனால் மகிழ்ச்சியுற்று. மத்தம் -
பொன்னூமத்தை.
|