3456. |
கரமிரு பத்தினாலுங் கடு வன்சின |
|
மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி
செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு
பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம்
வெண்டுறையே. 8 |
8.
பொ-ரை: பத்துத் தலைகளையுடைய அரக்கனான
இராவணன், தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன்
கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை
சிவபெருமான் அழித்தான். அவன் தன்னைப் போற்றி வழிபடும்
பக்தர்களின் வினைகளை அறுப்பவன். தன் திருமேனியின் ஒரு
பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன்
விளங்கும்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
இருபதினாலும் - இருபத்தினாலும் என்றது விரித்தல்
விகாரம். கடு(ம்) வன் சினம் - மிகவலிய கோபம். கடி என்னும்
உரிச்சொல் மிகுதிப்பொருளில் வந்தது. எடுத்த என்ற
பெயரெச்சத்துக்கு மலையை என்ற செயப்படு பொருள்
வருவித்துரைக்க.
|