| 
         
          | 3457. | கோல மலரயனுங் குளிர் கொண்ட |   
          |  | னிறத்தவனும் சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய
 செந்தழலான்
 மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை
 வெண்பிறையான்
 வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம்
 வெண்டுறையே.                     9
 |  
       
            9. 
        பொ-ரை: அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று
 கருநிறமுடைய திருமாலும், தனது தன்மையை அறிதற்கு
 அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன்
 சிவபெருமான். அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி
 நின்றான். முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை
 அணிந்தவன். கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய
 நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
 திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்
 .      கு-ரை: 
        கோலம் - அழகையுடைய மலர். குளிர் கொண்டல் - என்றமையாற் கரியமேகம் என்க. சீலம் தனது
 நிலையை. திகழ்ந்து தங்கிய - பிரகாசித்து உயர்ந்த, செந்தழலான்
 மூலம் அது - எல்லாத் தத்துவங்கட்கும் முதலாம் பொருள். ஆகி
 நின்றார்.
 |