3459. |
திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை |
|
மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர்
தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம்
பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின
பற்றறுமே. 11 |
11.
பொ-ரை: உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி,
குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும்
சீகாழியில் அவதரித்த தலைவனான, பலகலைகளில் வல்ல
ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை
ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும்.
கு-ரை:
திண்(ண)ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில்.
திண்மை - திண் என்று ஆயது. ஈறுபோதல் என்னும்விதி. சூழ்
தரு - சூழ்ந்த. எண் அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை.
இசை - இசைத்தமிழால்.
|