3480. செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங்
       குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட
     னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே
     யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர்
     தக்கோரே.                       11

     11. பொ-ரை: சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும்
திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு
அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி,
அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின்
திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத்
தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்
பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.

     கு-ரை: அம் - அழகிய, தண்- குளிர்ந்த, பூ - பொலிவுற்ற.
கலி - ஒலிமிக்க (காழி). காழியடிகள் - திருத்தோணியப்பர்.