3483. |
குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் |
|
வடபாலும்
கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு
மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார்
தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே. 3 |
3.
பொ-ரை: சிவபெருமான் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு
என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார்.
அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும், மெய்ஞ்ஞானத்தால்
தம்மைப் போற்றுவார்கட்கும், மனத்தால் சிந்தித்துக் காயத்தால்
தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர். வணங்கிப்
போற்றாதவர் கட்கு மாறுபாடாக விளங்குபவர். அப்பெருமான்
திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
பிரியநாதர் ஆவார்.
கு-ரை:
குணக்கு - கிழக்கு. குடபால் - மேற்குப் பக்கம். வட
பால் - வடக்குப் பக்கம். கணக்கு என்ன - ஒரு நிகராக. பிணக்கம்
- மாறுபாடு.
|