3494. |
கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே |
|
லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா
ரான்வெள்ளை |
|
ஏறணிந்தார்
கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 3 |
3.
பொ-ரை: ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர்.
குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு, கங்கை, பாம்பு
இவற்றை அணிந்து மகிழ்ந்தவர். வெற்றிக் கொடியில் வெண்ணிற
இடபத்தைக் கொண்டுள்ளார். மலைபோன்ற மார்பில் எலும்பு
மாலையை அணிந்துள்ளார். திருநீற்றையும் அணிந்துள்ளார்.
கு-ரை:
கொடி இடையை - பூங்கொடிபோலும் இடையுடைய
உமா தேவியாரை. கூறு அணிந்தார் - (இடப்) பாதியாகக்
கொண்டார். உகந்தார் - மகிழ்ந்தார். கொடியதன்மேல் -
கொடியின்மேல். வெள்ளை - வெண்மையாகிய. ஆன் ஏறு
அணிந்தார் - இடபத்தைக் கொண்டார். வரைமார்பில் - மலை
போன்ற மார்பில். என்பு - எலும்பு; மாலையை அணிந்தார். நீறு
அணிந்தார் - திருநீற்றையும் அணிந்தார். கொடிஇடை
- அன்மொழித்தொகை.
|