3499. |
ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை |
|
யெழில்வரைவாய்த்
தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார்
நன்மையினார்
ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி
யழகமரும்
நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 8 |
8.
பொ-ரை: ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான
இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம்
காற்பெருவிரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர்
சிவபெருமான். அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார்.
அப்பெருமான் ஆழ்ந்த அகழியும், சுற்றிய வயல்களும், மதில்களும்
நிறைந்த அழகுடன் திகழும், நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க
திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
எழில் வரைவாய் - அழகிய (கைலை)
மலையினிடத்து. தாழ் - (சற்றே) வளைத்த. விரலால் ஊன்றியது ஓர்
தன்மையினார் - ஊன்றி வலியழித்த தன்மையையுடையவர்.
நன்மையினார் - (அவ்வாறு செய்த அதுவும்
மறக்கருணையேயாகலான்) நன்மையே செய்பவர்; இறைவன் செயல்.
சிவஞானசித்தியார் சுபக்கம் 5,6,15,16. நிக்கிரகங்கள் தானும்
நேசத்தாலீசன் என்றும், தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள்
என்றும் தொடங்கும் சிவஞானசித்தியார் விருத்தங்களும்,
இமையளவும் உபகாரம் அல்லா ஒன்றை இயக்கா நிர்க்குணக்
கடலாய் இருந்த ஒன்றே என்ற தாயுமானவர் வாக்கும்
அறியத்தக்கன. மதில் புல்கி - மதிலைச் சேர்ந்து. ஆழ் கிடங்கும்
- ஆழ்ந்த அகழியும் (ஆகிய இவற்றால்). அழகு அமரும் - அழகு
தங்கிய. கச்சி நீள்மறுகின் - நெடிய வீதியையுடைய கச்சி.
|