3502. கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
       காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான
     தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான
     சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத்
     திருப்பாரே.                     11

     11. பொ-ரை: கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க
திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும், தன்
திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான்
திருவடிகளை வாழ்த்தி, குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள்
சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய
பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள்
இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர்.

     கு-ரை: கண் ஆரும் - கண்ணுக்கினிமை நிறைந்த.
(கலிக்கச்சி நெறிக் காரைக்காடு)