3555. இலங்கையநகர் மன்னன்முடி யொருபதினொ
       டிருபருதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ
     ரிருந்தவிடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய
     மூ்ாகிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி
     கின்றமயி லாடுதுறையே.             8

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனின் பத்து
மடிகளையும், இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற்
பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு
அருள்புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடம், கலங்களோடு நுரையைத் தள்ளி, எதிரேயுள்ள குளத்தில்
பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு
களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க
திரும்யிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: (இலங்கை நகர் மன்னன் முடியொருபதினொடு
இருபது) தோள் நெரிய - தோள்கள் அரைபடும்படி. விலங்கலில் -
கைலைமலையில். அடர்த்து - நெருக்கி, அருள்புரிந்தவன்.
வினவுதிர்களேல் - கேட்பீர்களேயானால், கலங்கல் நுரை உந்தி -
கலங்கலோடு நுரையைத் தள்ளி. எதிர் வந்த - எதிரேயுள்ள. கயம்
மூழ்கி - குள்த்தில் பாய்ந்து, மலர்கொண்டு - அங்குள்ள மலர்களை
அடித்துக்கொண்டு, (அதனால்) மகிழ்ந்த, மலங்கி வரு - சுழித்து
வருகின்ற, காவிரியாறு, நிரந்து - பரவி. பொழிகின்ற - வளம்
கொழிக்கினற, மயிலாடுதுறை. வந்த - உள்ள என்னும் பொருள்
தந்து நின்றது. “வான் வந்த தேவர்களும் மாலயனோடிந்திரனும்”
என்புழிப்போல (தி. 8 திருவம்மானை. 4). தோள் - இசை நோக்கிக்
குறுக்கல் விகாரமற்றது. மேல்வீழிமிழிமலைப் (தி. 3 ப. 85)
பதிகத்தும் காண்க.