3561. |
ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை |
|
யுணர்ந்தவடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல
நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க
டோறுமழகார்
வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும்
வைகாலிலே. 3 |
3.
பொ-ரை: மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால்
செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய், நல்ல தவத்தை
மேற்கொண்டு, பதிநூல்களை நன்கு கற்று, கேட்டுத் தெளிய
உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க, நாடேறும் அருள்
செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நல்ல
வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த
மதில்களும், மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும்
விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஊனமிலராகி - யாதொரு குற்றமும் இல்லாதவராய்.
நல்தவம் மேற்கொண்டு. மெய் - உண்மை நூல்களைக் கற்று,
(கேட்டு), (அவை உணர்ந்த அடியார்கள்) ஞானம் மிக. நின்று
தொழ - நின்று வணங்க, நாடேறும் அருள் செய்ய வல்ல நாதன்
இடமாம். ஆன வயல் - பொருந்திய அருள் செய்ய வல்ல நாதன்
இடமாம். ஆன வயல் - பொருந்திய வயல்களில். மல் - (மல்லல்)
வளங்கள். சூழ்தரும் - நிறைந்திருக்கும். சூழியருகு - நீர்
நிலைகளின் பக்கங்களிலும். பொழில்கள் தோறும் - சோலைகள்
தோறும். (சந்திரனும் முகில்களும்) வந்து. அணவும் - வந்து தவழும்
வைகாவிலே
|