3562. |
இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது |
|
நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு
தானர்விடம்
முன்னைவினை
போய்வகையி னான்முழு
துணர்ந்துமுயல்
கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல்
வைகாவிலே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமானை இன்ன உருவம் உடையவன்;
இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால்
அறியமுடியாது. புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று
சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன். அப்பெருமான்
அருளோடு வீற்றிருந்தருளும் இடம், முன்னை வினைகளெல்லாம்
நீங்க, அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும்
உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை, மாலை
என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும், வயல்வளம்
பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
இன்ன உரு - இன்னவடிவம் (இன்ன நிறம் என்று)
அறிவதேல் அரிது - ஆன்மபோதத்தினால் அறிவதானால் அறிய
முடியாது. நீதிபலவும் - பலவாகிய புண்ணியங்களெல்லாம், (தன்ன
உருவு ஆண் என) மிகுத்ததவன் - மிகுந்த
தவக்கோலத்தையுடையவன், நீதியோடு - அருளொடு. தான்
அமர்வு இடம் - தான் விரும்புதலையுடைய இடமாகும். முன்னை
வினை போய் - முற்பிறப்பில் செய்த வினைகள் நீங்க. வகையினால்
- முறைமைப்படி முழுதுணர்ந்து - முழுவதும் அறிந்து, முயல்கின்ற
- (நிட்டை கூடுதற்கு) முயல்கின்ற. முனிவர் - முனிவர்கள். மன்ன
- நிலைபெறும்படியான, இருபோதும் - இருவேளையும், மருவி -
அடைந்து. தொழுதுசேரும் - தொழுது சேர்கின்ற, வயல் - வயல்
வளம் பொருந்திய வைகாவில்.
|