3578. |
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு |
|
நீர்குவளை
தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு
மோசைபயின் மாறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை
யாயினவு மகல்வதெளிதே. 9 |
9.
பொ-ரை: தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர்,
குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும்
வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும்
ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி
இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின்
புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில்
நீங்கும்.
கு-ரை:
தூய்மையான. விரிதாமரைகள் - தாமரை மலர்களும்.
நெய்தல் கழுநீர் குவளைதோன்ற - இம்மலர்களும் தோன்ற - விரிய; (மது உண்கின்ற)
பாய - பரந்த. வரி - கீற்றுக்களையுடைய
(பல வண்டுகள்) பண் - பாடல்களை. முரலும் - இசைபாடும்.
ஓசைபயில் - ஓசைமிகுந்த (மாகறல்) சாய - வலி குறையும்படி. விரல்
ஊன்றிய - விரலால் அடர்க்கப்பட்ட, இராவணன் -
இராவணனுடைய. தன்மைகெட - நிலைகுலைய நின்ற பெருமான்.
ஆய - பொருந்திய. புகழ் - புகழை. ஏத்தும் - துதிக்கும். அடியார்,
வினை ஆயினவும் - வினை அனைத்தும் அகல்வது எளிது. ஆயின
வினையெனக்கொண்டு - இப்பிறப்பில் ஈட்டிய ஆகாமிய
வினைகளும் எனலும் ஆம். அப்பொழுது உம்மை இறந்தது
தழுவிற்றாம். சாய்தல்: - உரிச்சொல். இப்பொருட்டாதலைத்
தொல்காப்பியம் உரியியற்சூத்திரம் (34) கொண்டறிக.
|