3601. |
பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு |
|
மெச்சமறு
போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * * * 10 |
10.
பொ-ரை: பொய்யான துறவு வேடம்கொண்டு
பிச்சையெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும்
விருப்ப மான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன்
எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய
சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய
தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள்
சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.
கு-ரை:
பொச்சம் அமர் - பொய் பொருந்திய. (துறவி
வேடங்கொண்டு) பிச்சையெடுக்கும். அச்சமணும் - அந்தச்
சமணர்களும். எச்சம் அறு - புகழற்ற. போதியரும் - புத்தர்களும்.
ஆம் - ஆகிய. மொச்சை - இழி தொழிலர். பயில் - சொல்லும்.
இச்சை - விருப்பமான உபதேசமொழிகளை. கடி - விலக்கும்.
பிச்சன் - பித்தன் என்னும் பெயருடையவனும். மிகு நச்சு அரவன்
- மிகுந்த விடத்தைக்கக்கும் பாம்பை அணிந்தவனுமாகிய
சிவபெருமானது. மொச்ச - (மொய்த்த) அடியார்கள் நெருங்கிய
(நகர்தான்) மைசில் முகில் - கரிய சில மேகங்கள். வைச்சபொழில்
- தங்கிய சோலைகள்... ... எச்சம் - புகழ் என்னும் பொருளில்
வருதலை எச்சமென்றென்னெண்ணும் கொல்லோ (குறள். 1004)
என்பதாலும் அறிக. பிச்சன்: - பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி.
(தி.10 திருமந்திரம்).
|