| 
         
          | 3640. | செய்யதிரு 
            மேனிமிசை வெண்பொடி |   
          |  | யணிந்துகரு 
            மானுரிவைபோர்த் தையமிடு மென்றுமட மங்கையொ
 டகந்திரியு மண்ணலிடமாம்
 வையம்விலை மாறிடினு மேறுபுகழ்
 யாதவவர் வேதிகுடியே.               6
 |       6. 
        பொ - ரை: சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர். கரிய யானையின் தோலைப்
 போர்த்தவர். 'பிச்சையிடுங்கள்' என்று இளமைவாய்ந்த உமா
 தேவியாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர், நம் தலைவரான
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூமியில் பஞ்சத்தால்
 பண்டங்களின் விலை ஏறினாலும், மிகுந்த புகழும், குறையாத
 பண்பாடும் உடையவர்களும், இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும்
 போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய
 மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
      கு 
        - ரை: செய்ய திருமேனிமிசை 
        - சிவந்த திருமேனியில். வெண்பொடி அணிந்து - வெண்மையான திருநீற்றையணிந்து.
 கருமான் உரிவையைப் போர்த்து - கரிய மிருகமாகிய யானையின்
 தோலைப் போர்த்து. ஐயம் இடும் என்று - பிச்சை இடுங்கள் என்று.
 மடமங்கையொடு - இளமை 
        பொருந்திய உமாதேவியாரோடு. அகம்
 திரியும்- வீடுவீடாகத் திரிகின்ற, அண்ணல் - தலைவனது (இடமாம்).
 வையம் -பூமி. விலை மாறிடினும் - பஞ்சத்தினால் பண்டங்களின்
 விலை மாறினாலும். ஏறுபுகழ் - முன்பே மிகுந்த கீர்த்தி. மிக்கு -
 மேலும் மிகுந்து. இழிவிலாத - குறையாத. வகையார் - பண்பாடு
 உடையவர்களும். தண்புலவருக்கு - இனிய புலவர்களுக்குக் (கொடை
 தரும்போது). வெய்ய மொழி - வன்சொற்களை. உரைசெய்யாத -
 சொல்லாத. அவர் - அத்தகையார்களுமாகிய மாந்தர் (வாழும்).
 வேதிகுடி - திருவேதிகுடியாம்.
 |