3641. |
உன்னியிரு
போதுமடி பேணுமடி |
|
யார்தமிட
ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ
லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம்
விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய
ரியற்றுபதி வேதிகுடியே. 7 |
7.
பொ-ரை: காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும்
தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய
துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான்.
தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற
நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி
கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும்
பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும்,
ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும்
மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச்
சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய
மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
இருபோதும் - பகல் இரவு என்ற இருவேளைகளிலும்.
உன்னி- தியானித்து. அடிபேணும் - தமது திருவடியைப் போற்றும்.
அடியார் தம் இடர் - அடியார்களுடைய துன்பங்கள். ஒல்க - ஒழிய.
அருளிய - அருள் செய்து. துன்னிய - அடைந்த. ஒரு நால்வருடன்
- சனகர் முதலிய நால்வரோடு. ஆல் நிழல் இருந்த - கல்லாலின்
நிழலில் இருந்து உபதேசித்த. துணைவன்தன் - அனைத்துலகத்திற்கும் பற்றுக்கோடாய்
உள்ள சிவபெருமானது (இடமாம்), கன்னியரோடு
ஆடவர்கள் - கன்னிகைகளுடன் ஆண்கள், (புரியும்) மாமணம் -
சிறந்த மணத்தை, விரும்பி - நடத்துவதை விரும்பி, அரும் -
வேறெங்கும் காணற்கு அரிய, மங்கலம் - திருமணத்திற்குரிய
மங்கலச் சடங்குகளை. மிக - மிக்க சிறப்புற, (மங்கையர் இயற்றுபதி)
மின் இயலும் - மின்னலைப் போன்ற, நுண்ணிடை - சிறிய
இடையையுடைய. நல் மங்கையர் - சடங்கியற்றும் தகுதிவாய்ந்த
பெண்டிர்.
|