3647. |
பேதைமட
மங்கையொரு பங்கிட |
|
மிகுத்திடப
மேறியமரர்
வாதைபட வண்கடலெ ழுந்தவிட
முண்டசிவன் வாழுமிடமாம்
மாதரொடு மாடவர்கள் வந்தடி
யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல்
கின்றவளர் கோகரணமே. 2 |
2.
பொ-ரை: பேதைமைக் குணத்தையுடைய இளம்
பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, இடப
வாகனத்தின் மேலேறி, தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது
கடலில் தோன்றியவிடத்தை உட்கொண்டு சிவபெருமான்
காத்தருளினார். அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது
பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை
வணங்கி, சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற, சாத்திய மாலைகளில்
வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த
திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பேதை மடமங்கையொரு பங்கு இடம் - பேதைமைக்
கணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியாரை ஒரு
பாகமாகிய இடப்புறத்தில். மிகுத்து - தங்கி மகிழ்ச்சி மிகச் செய்து.
இடபமேறி - இடபத்தின் மேல் ஏறி, அமரர் வாதைபட - தேவர்கள்
வருத்தம் நீங்க. வண்கடல் - வளம்பொருந்திய கடலில், எழுந்தவிடம் உண்டசிவன் வாழும்
இடமாம். மாதரொடும் - பெண்களோடும்
ஆடவர்கள் வந்து. அடியிறைஞ்சி - பாதங்களை வணங்கி.
மாமலர்களைத் தூய் - சிறந்த மலர்களைத்தூவி. (சாத்திய) கோதை
திருமாலைகளில். வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள்.
இசைகொள் கீதம் - இசையோடு பொருந்திய பாடல்களை.
முரல்கின்ற - பாடுகின்ற. வளர்கோகரணம் - கீர்த்திமிகுந்த கோகரணம்.
|