3658. |
பட்டமுழ
விட்டபணி லத்தினொடு |
|
பன்மறைக
ளோதுபணிநல்
சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள்
செய்தழல்கொண் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல்
செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி
வேதியர்கள் வீழிநகரே. 2 |
2.
பொ-ரை: கொட்டும் முழவின் ஓசையும், ஊதும் சங்கின்
ஒலியும், பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும்,
சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட
அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான்.
அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை
மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும், செந்நெல் பெருகும்
வயல்வளமிக்கதும், வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும்,
தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான
திருவீழிநகர் என்னும் பதியாகும்.
கு-ரை:
பட்ட - கொட்டிய. முழவு - முழவின் ஓசையையும்,
இட்ட - ஊதிய, பணிலத்தினொடு - சங்கவாத்தியத்தின் ஓசையுடனே,
பல் மறைகள் - பல சாகைகளையுடைய வேதங்களை, ஓது -
ஓதுகின்ற, பணி - பணியை மேற்கொண்ட, நல் - நல்ல, சிட்டர்கள் -
சீலமுடையவர்களாகிய. அந்தணர்கள், சயத்துதிகள் செய்ய - வெல்க
என்னும் துதிப்பாடல்கள் பாட, அருள்செய்து, தழல் கொள்
மேனியவன் - அக்கினிமயமான திருமேனியுடைய சிவபெருமானது,
ஊர். மட்டு உலவு - வாசனை வீசும். செங்கமல வேலி - செந்தாமரை
வேலியைப்போல் சூழ்ந்த. வயல் - வயல்களில். (செந்நெல்வளர் -
வீழிநகர்) மன்னு - நிலைபெற்ற. பொழில்வாய் - சோலையினிடத்தில்.
விட்டு உலவு - வீசி வீசி அடிக்கின்ற தென்றல் - தென்றல் காற்று,
விரைநாறு. வாசம் வீசுகின்ற. பதி - தலமாகிய (வேதியர்கள் -
அந்தணர்கள் வசிக்கும்) வீழிநகரே.
|