3660. |
செந்தமிழர்
தெய்வமறை நாவர்செழு |
|
நற்கலைதெ
ரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள்
செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ
ழிற்பழன வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
ரும்புபதி வீழிநகரே. 4
|
4.
பொ-ரை: பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும்
அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய
அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த
அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி
சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க,
வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய
திருவீழிமிழலையாகும்.
கு-ரை:
செந்தமிழர் - செந்தமிழ் மொழி பேசுவோர்.
தெய்வமறை நாவர் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களை
ஓதும் நாவையுடையவர், செழுநற்கலை தெரிந்தவர் அவரோடு -
சிறந்த நற்பயன் தருவாகிய கலைகளைத் தெரிந்தவர்களாகிய
அவர்களுடன், அந்தமில் குணத்தவர்கள் - அளவற்ற
குணத்தையுடையவர்களான ஞானிகளும் (அர்ச்சனைகள் செய்ய)
அமர்கின்ற - விரும்பித் தங்குகின்ற. அரன் அமர்கின்ற ஊர் -
சிவபெருமான் எழுந்தருளிய ஊராகும். கொந்து அலர் பொழில் -
கொத்துக்களில் மலர்கின்ற சோலைகளும், வேலி - சூழ்ந்த. பழனம்
- வயல்களில், குளிர் - குளிர்கின்ற. தண் புனல்வளம் பெருக -
தண்ணீரின் வளம்பெருக. வெம் - விரும்பத்தக்க. திறல் விளங்கி -
வலிமையால் விளங்கி. வளர் - மிகுகின்ற. வேதியர் விரும்பு பதி -
அந்தணர் விரும்பும் தலம் ஆகிய வீழி நகரே.
|