3670. |
வண்டரவுகொன்றைவளர்
புன்சடையின் |
|
மேன்மதியம்
வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர
மேட்டிபழி தீரக்
கண்டரவ
வொண்கடலி னஞ்சமமு
துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு
தோணிபுர மாமே. 3
|
3.
பொ-ரை: வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர்
மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து, பண்டைக்காலத்தில்
இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய
மேலான இடத்திலுள்ள சிவபெருமான், திருமால் முதலியோர் தனது
அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு
நீங்குமாறு, திருவருள் செய்து, அலைகளின் ஆரவாரத்தையுடைய
சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட
கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர், திருத்தொண்டர்கள் ஒருவரை
ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம்
ஆகும்.
கு-ரை:
வண்டு - வண்டினம். அரவு - மோதி ஊதுகின்ற.
கொன்றை (மாலையோடு) வளர் - வளர்கின்ற (புன்) சடையின் மேல்
- சடையின்மேல். மதியம் - பிறைச்சந்திரனை, வைத்து. அரவு -
பாம்பை. பண்டு - அக்காலந்தொட்டு. தன் அரையில், ஆர்த்த -
அரைஞாணாகக்கட்டிய. பரமேட்டி - மேலான இடத்திலிருப்பவனும்.
பழிதீர - (திருமால் முதலியோர் இறைவனாணையின்றிக் கடல்
கடையச் சென்ற) தோடம் அவரைவிட்டு நீங்குமாறு. கண்டு -
தெரிந்து. அரவம் - ஆரவாரத்தையுடைய. ஒண் கடலின் - சிறந்த
பாற்கடலில் எழுந்த. நஞ்சம் அமுது உண்ட கடவுள். ஊர் -
ஊராவது. தொண்டர் அவர் - அத்தகைய பேரன்பு படைத்த
அடியார்கள். மிண்டி - ஒருவர் ஒருவரின் நெருங்கி. வழிபாடுமல்கு -
வழிபடும் வழிபாடுகள் மிகுந்த. தோணிபுரம் ஆமே.
|