3678. |
துஞ்சிருளி
னின்றுநட மாடிமிகு |
|
தோணிபுர
மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி
யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள்
பெற்றுவளர் வாரே. 11 |
11.
பொ-ரை: அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும்
பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த
திருத்தோணிபுரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை
வணங்கித திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே
தமக்குப் பற்றுக்கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று, அதனை
இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக்
காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள். அவர்கள் நெஞ்சிலுள்ள
அறியாமை என்னும் இருள் நீங்கப் பெற்று, இறைவனது அருள்
பெற்றுச் சீலத்துடன் வளர்வர்.
கு-ரை:
துஞ்சு - உலகெலாம் ஒடுங்கிய. இருளில் பிரளயகால
இருளில். (நின்று) நடம் ஆடி - நடம் ஆடிய பெருமானும். மிகு -
புகழால் மிகுந்த, தோணிபுரம் மே(வி)ய. மஞ்சனை - சிவபெருமானை.
மாலையே நமது பற்றுக்கோடாகும் என்று, நின்று இசைமொழிந்த
அடியார்கள். தடுமாற்றம், வஞ்சம், இலர் - நெறி தவறுதலும்,
அதற்குக் காரணமாகிய மாயையும் இலராவார். இருளாவது தன்னைக்
காட்டிப் பிறபொருளைக் காட்டாமலிருக்கும்; இது தன்னையும்,
தான்மறைத்த ஆன்மாவையும் காட்டாமையால் வஞ்சம் எனப்பட்டது.
இருளும் - ஆணவமலமும், மாயையும் இலர் எனவே. ஏனைய
கன்மமும் தொலையப்பெற்று, அருள் பெற்று, வளர்வார் என்க.
|