| 
         
          | 3681. | நீறுடைய 
            மார்பிலிம வான்மகளொர் |   
          |  | பாகநிலை 
            செய்து கூறுடைய வேடமொடு கூடியழ
 காயதொரு கோலம்
 ஏறுடைய ரேனுமிடு காடிரவி
 னின்றுநட மாடும்
 ஆறுடைய வார்சடையி னானுறைவ
 தவளிவண லூரே.                     3
 |        3. 
        பொ-ரை: சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில் இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு
 அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில்
 வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர். கங்கையை
 நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது
 திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
      கு-ரை: 
        இமவான் மகள் - உமாதேவியாரை. ஓர்பாகம், நிலைசெய்து- பிரியாமற்கொண்டு, கூறுடைய வேடமொடுகூடி
 அழகாயதொரு கோலம் - ஒருபாதி ஆணாகிய தோற்றத்தோடு கூடி
 அழகாகியகோலம். ஏறு - எவற்றினும் சிறக்க உடைய (வ) ரேனும்.
 இடுகாடு - இடுகாட்டில், (இரவில் நின்று நடம் ஆடும். ஆறு உடைய) வார் 
        - நெடிய சடையினான். உறைவது - தங்குவது,
 அவளிவள்நல்லூரே. இக்கோலம் ஏற உடைமை, இடுகாட்டில் இரவில்
 நின்று நடமாடுதற்கு ஏற்றதன்றாயினும், "இன்ன தன்மையனென்று
 அறியொண்ணா இறைவன்" ஆகலின், ஆயிற்றென்க. ஏற உடையர் -
 ஏறுடையர் என்றாயது. "தொட்டனைத்தூறும்" என்ற
 திருக்குறளிற்போல, ஏறுடையர். வார்சடையினான் - என வந்தது
 ஒருமை பன்மை மயக்கம்; பன்மை - உயர்வுபற்றியது.
 |