3684. |
துஞ்சலில
ராயமரர் நின்றுதொழுப |
|
தேத்தவருள்
செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி
தாகியொரு நம்பன்
மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக
லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ
தவளிவண லூரே. 6 |
6.
பொ-ரை: உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத்
தொழுது போற்ற, நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள்
செய்து, கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல்
வெண்மையாகவும் விளங்குபவர் சிவபெருமான். மதம் பிடித்த யானை
அஞ்சும்படி, வானளாவ நிமிர்ந்து அதன் தோலை உரித்து, உமை
நடுங்கத் தம் மார்பில் போர்த்தவர். அப்பெருமான் வீற்றிருந்
தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அமரர் - துஞ்சல் இலராய் - சோம்பலின்றி. நின்று
தொழுது ஏத்த அருள்செய்து. நஞ்சம் உண்டு, (அதனால்) மிடறு -
கழுத்து. கரிது ஆய - கரியது ஆகிய, வெளிது ஆகி - ஏனைய
திருவுருவம் படிகம்போல வெண்மையுடையது ஆகப்பெற்று (உடைய)
ஒப்பற்ற. நம்பன் - சிவபெருமான். சதாசிவ மூர்த்தியின் திருவுருவம்
படிகம் போன்றது ஆதலின், வெளியது ஆய ஒரு நம்பன் என்றார்.
மஞ்சு - மேகம்; இங்கு வானத்தைக் குறித்தது, உற - பொருந்த.
நிமிர்ந்தமை - யானையுரிக்கும் அவசரம். மதவேழம் அஞ்ச மஞ்சு
உற நிமிர்ந்து (அதன்தோலை உரித்து) உமைநடுங்க. அகலத்தோடு -
மார்பில். அளாவி - சேர்த்துப் (போர்த்த). உரியான் -
தோலையுடையவன். அஞ்ச(உரித்த) மதவேழ உரியான் என்க.
போர்த்த. உரித்த, என ஒருசொல் வருவித்துரைக்கப்பட்டது. அன்றி
வினை முடிபு கொள்ளுமாறு இல்லை.
|