3685. |
கூடரவ
மொந்தைகுழல் யாழ்முழவி |
|
னோடுமிசை
செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து
பேரிடப மோடும்
காடரவ மாகுகனல் கொண்டிரவில்
நின்றுநட மாடி
ஆடரவ மார்த்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 7 |
7.
பொ-ரை: மொந்தை, குழல், யாழ், முழவு முதலிய
வாத்தியங்கள் ஒலிக்க, எண்தோள்வீசி ஆடும்போது சடையிலுள்ள
கங்கைநீர் அம்பு போலப் பாய, பெரிய இடப வாகனத்தோடு,
சுடுகாட்டில் ஓசையுடன் எரியும் நருப்பையேந்தி இரவில் நடனமாடி,
படமெடுத்தாடும் பாம்பைக் கச்சாகக் கட்டிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலம்
ஆகும்.
கு-ரை:
மொந்தை, குழல் யாழ் முதலிய வாத்தியங்கள்
முழவினோடும். கூடு அரவம் - ஒத்துவரும் ஓசைகளாக. இசைசெய்ய
-ஒலிக்க. பீடு அரவம் ஆகு - பெரிய ஓசைதரும். படர் - பரவுகின்ற.
அம்பு செய்து - தோள்வீசி யாடும்போது சடையில் உள்ள கங்கைநீர்
ததும்பும். ஆதலால் அதனை
அம்புசெய்து - என்பதனால்
தெரிவித்தார். அம்புசெய்து - தண்ணீர் விசிறச்செய்து எனக்கொள்ளல் வேண்டும். பேர்
இடபமோடும் - பெரிய இடபவாகனத்தோடும். காடு
- சுடுகாட்டில். அரவம் ஆகு - சடசட ஒலிக்கும் ஓசையையுடைய.
கனல் கொண்டு - நெருப்பையேந்தி, இரவில் நின்று நடம் ஆடி.
அரவம் ஆர்த்த - பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமான். இதன்
கருத்து; மொந்தை முதலிய வாத்தியங்கள் ஒலிக்கச் சடையிற்
கங்கைநீர் ததும்பக் கனலேந்தி, இரவில், இடபமோடும் நின்று நடம்
ஆடிப் பாம்பைக் கட்டிய பெருமான் உறைவது அவளிவள் நல்லூர்
என்பதாம். அறக்கடவுளே இடபமாகலான் மகா சங்கார காலத்தும் அழியாது நிற்க, அதனோடும்
நின்று நடம் ஆடி என்றார்.
|