3686. |
ஒருவரையு
மேல்வலிகொ டேனெனவெ |
|
ழுந்தவிற
லோனிப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுளனோ
வெனவெ குண்ட
கருவரையு மாழ்கடலு மன்னதிறல்
கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ
தவளிவண லூரே. 8 |
8.
பொ-ரை: எனக்கு மேல் ஒருவரையும்
வலிமையுடையவராகக் காணப்பொறேன் என வீரத்துடன் எழுந்து,
இக்கயிலைமலையின் மேல்ஒரு பெருமான் உளனோ என வெகுண்டு,
மலையைப் பெயர்த்த பெரியமலை போன்றும், ஆழமான
கடல்போன்றும் வலிமையுடைய அரக்கனான இராவணனைத் தன்காற்
பெருவிரலை ஊன்றி, அம்மலையின்கீழ் நெரியும்படி செய்த
சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர் என்னும்
திருத்தலமாகும்
. கு-ரை:
மேல் - எனக்குமேல், ஒருவரையும், வலிகொடேன் -
வலிமையுடையவராகக் காணப்பொறேன் என எழுந்த. விறலோன் -
வலியோனாகிய (இராவணன்) 'இப்பெருவரையின் மேல்ஓர்
பெருமானும் உளனோ' எனக் கோபித்த. கருவரையும் - கரிய
மலையும். ஆழ்கடலும், அன்ன - போன்ற. மலைபோன்ற (திறல்)
வலிமை. கடல் போன்ற கைகள் என்க. உடையானை -
உடையவனாகிய இராவணனை. அரு, வரையில் - (கயிலை)
மலையின் கீழ். ஊன்றி - விரல் ஊன்றி. அடர்த்தான் உறைவது
அவளிவள் நல்லூரே.
|