3688. |
கழியருகு
பள்ளியிட மாகவடு |
|
மீன்கள்கவர்
வாரும்
வழியருகு சாரவெயி னின்றடிசி
லுள்கிவரு வாரும்
பழியருகி
னாரொழிக பான்மையொடு
நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 10
|
10.
பொ-ரை: ஆற்றங்கழி அருகிலிருக்கும் சமணப்பள்ளி
இடமாக நின்று, சமைத்து உண்பதற்குரிய மீன்களைக் கவரும்
சமணர்களும், தெருக்களில் உச்சிவேளையில் நின்று உணவு ஏற்க
வரும் புத்தர்களும் கூறும் பழிக்கு அடுத்துச் சொல்வதாகிய
பாவத்தை உடையவர்கள். பக்தியால் தொழுதேத்தும் அடியவர்கள்
கண்களில் இருந்து தோன்றும் அருவி போன்ற நீரில் தோய்ந்து
விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருஅவளிவணல்லூர்
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கழியருகு - ஆற்றங்கழி யருகிலிருக்கும். பள்ளி -
சமணப்பள்ளி இடமாகிநின்று. அடும் - சமைத்து உண்பதற்குரிய
(மீன்கள்) கவர்வார் - கொள்பவர்களாகிய அமணரும்,
வீதியோரங்களில் உச்சிவேளையில் நின்று உணவின் பொருட்டாக
வருபவர்களாகிய, புத்தரும், உச்சிப் பொழுதில் பிச்சை பெற்று
உண்பது. புத்த சந்நியாசியின் முறை. "அங்கையிற்கொண்ட பாத்திரம்
உடையோன் கதிர்சுடும் அமையத்துப் பனிமதிமுகத்தோன்."
(மணிமேகலா தெய்வம்...தோன்றிய காதை. 59-60.) என்பது அறிக.
தொழுது ஏத்தும் அழி அருவி தோய்ந்தபெருமான் - தொழுதேத்தும்
அன்பர்கள் தம் கண்களின்றும் அழிந்து வருகின்ற அருவி போன்ற
கண்ணீரில் நீராடிய பெருமான். உறைவது அவளிவணல்லூர். "பாந்தள் பூணாம் பரிகலம் கபாலம்,
பட்டவர்த்தனம் எருதன்பர் வார்ந்த
கண்ணருவி மஞ்சனசாலை மலைமகள் மகிழ் பெருந்தேவி..." என்னும்
திருவிசைப்பா (தி.9) வால் தோய்தல் அறிக. பழியருகினார் - பழிக்கு
அடுத்துச் சொல்வதாகிய பாவத்தையுடையவர்கள்.
|