3689. |
ஆனமொழி யானதிற லோர்பரவு |
|
மவளிவண
லூர்மேல்
போனமொழி நன்மொழி களாயபுகழ்
தோணிபுர வூரன்
ஞானமொழி
மாலைபல நாடுபுகழ்
ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்க
டீயதிலர் தாமே. 11
|
11.
பொ-ரை: பொருளுடைய புகழ்மொழிகளால்
மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற
அவளிவணல்லூர் என்னும்
திருத்தலத்தைத் திசைகள் தோறும் பரவிய நன்மொழியால்
புகழ்போற்றும் தோணிபுரத்தில் அவதரித்த சிவஞானங் கமழ்கின்ற
திருப்பதிகங்களால் நல்ல நாடுகளெல்லாம் புகழ்கின்ற ஞானசம்பந்தன் அருளிய தேன்போன்ற
இனிமையான மொழிகளால் ஆன
இப்பாமாலையால் புகழ்ந்து போற்றுபவர் துயரற்றவர் ஆவர்.
அவர்களைத் தீமை அணுகாது.
கு-ரை:
ஆன - பொருளுடையதாகிய. மொழியான -
புகழையுடைய. திறலோர் - மெய்ஞ்ஞானிகள். பரவு - துதிக்கின்ற.
அவளிவள்நல்லூர் மேல். தோணிபுரவூரன், ஞானசம்பந்தன்.
தேனமொழிமாலை புகழ்வார்கள் துயர்கள் தீயது இலர்தாம் ஏ -
என்பது வினை முடிபு. போன மொழி - திசைகள் தோறும் பரவிய
வார்த்தை. நன்மொழிகளாய - நல்ல வார்த்தைகளாகிய, புகழ்.
என்பது:- "இசையாற்றிசை போயதுண்டே" என்னும் சிந்தாமணி
போன்றது. புகழ்த் தோணிபுரம் - புகழையுடைய தோணிபுரம் சந்தம்
நோக்கித் திரியாதாயிற்று. ஞானம் மொழிமாலை பலநாடு புகழ் -
சிவஞானங் கமழ்கின்ற திருப்பதிகங்களால் பல நாடுகளெல்லாம்
புகழ்கின்ற ஞானசம்பந்தன். மொழியை மலராகவும், பதிகங்களை
மாலையாகவும் உணர்த்தினமையால் (சிவ) ஞானம் - மணம் ஆகிறது.
ஏகதேச உருவகம். தேன்-இனிமையையுடைய. துயர்கள் தீயது இலர் -
துன்பங்களும், அவற்றின் காரணமான வினையும் இலர் ஆவர்.
|