3696. |
பொங்கரவ
ரங்குமுடன் மேலணிவர் |
|
ஞாலமிடுபிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய்து
லங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை
யடிகளிடம் வினவில்
செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல
தார்திருந லூரே. 7 |
7.
பொ-ரை: இறைவன் சினம் பொங்கப் படமெடுத்தாடும்
பாம்பை அணிந்துள்ளவர். எலும்பையும் திருமேனியில் அணிந்தவர்.
பிரமகபாலமேந்திப் பூமியிலுள்ளோர் இடும் பிச்சையேற்க
ஆரவாரித்துத் திரிபவர். தம் திருமேனியில் திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். கங்கையையும்,
பாம்பையும், சந்திரனையும் சடை
முடியிலணிந்துள்ளவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
செங்கயல் மீன்கள் சேற்றில் குதிக்கும் நீர்வளமிக்க திருநல்லூர்
என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:
அங்கம் - எலும்பை. (உடல்மேல் அணிவர்) ஞாலம்
- பூமியிலுள்ளார். இடு(ம்) பிச்சைக்கு. தங்கு - பொருந்திய. அரவம்
ஆக - ஆரவாரத்தோடு. உழிதந்து - சுற்றித்திரிந்து. கங்கை. அரவம்
(விரவு-) திங்கள் - அணிந்த சடையையுடைய அடிகள். வதி -
சேற்றில், செங்கயல் குதிகொள்ளும். புனல்வளம் மிக்க திருநல்லூர்.
|