3711. |
போதியல்
பொழிலணி புறவநன் னகருறை |
|
புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு
விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள
வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு
பிறவியே. 11 |
11.
பொ-ரை: மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த
திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய
உடம்பினனான சிவபெருமானைப் போற்றி, அந்தணர்களின்
தலைவனும், மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய
திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய
இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில்
இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர்.
கு-ரை:
போது இயல் - மலர்களையுடைய பொழில். அணி
-சோலை சூழ்ந்த (புறவநன்னகர்
உறை.) புனிதனை -
தூயவுடம்பினனாகிய சிவபெருமானை. தலைதமிழ்கெழு - மேகம்
போற் பொழிகின்ற தமிழையுடைய. விரகினன் - சமர்த்தன்.
அதற்குரியதாகிய இசை பொருந்தும்படி உரைசெயும் நீதியர் - பாடும்
முறைமை தவறாதோர். தலையல் - மழைபெய்தல். இதனை
"தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து" என்னும்
திருமுருகாற்றுப்படை(அடி.9)யால் அறிக.
|