3712.
|
மட்டொளி
விரிதரு மலர்நிறை சுரிகுழன் |
|
மடவரல்
பட்டொளி மணியல்கு லுமையமை யுருவொரு
பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை
முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி
மிழலையே. 1 |
1.
பொ-ரை: மலர் விரிய நறுமணம் கமழும், நெளிந்த
கூந்தலையுடையளாய், மடமைப் பண்புடைய பெண்ணானவளாய்,
பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமா
தேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான்,
சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற
கங்கைநீரோடு, கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில்
விட்டுவிட்டுப் பிரகாசிக்கும், தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும்
பதி திருவீழிமிழலை என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
மட்டு - வாசனையோடு. ஒளிவிரிதரு - ஒளிபரவும்
(மலர்நிறை) சுரிகுழல் - நெளிந்த கூந்தலையுடைய. மடவரல் -
பெண். பட்டு ஒளி - பட்டு ஆடையில் ஒளியையுடைய. மணி -
மேகலாபரணத்தையணிந்த, உமை. (மணி - சினையாகுபெயர்) ஒரு
பாகம் ஆ(க). அமை - அமைந்த. உரு - வடிவோடு. கட்டு -
சடையின்கண் (கட்டப்படுவது என்னும் பொருளில் ஐகார விகுதி
புணர்ந்து கெட்டது.) ஒளிர் - பிரகாசிக்கின்ற, புனலொடு - கங்கை
நீரோடு. கடி அரவு -
கடிக்கும் பாம்பு, உடன் உறை - சேர
சிக்கின்ற. முடிமிசை - தலையில். விட்டு ஒளி - விட்டு விட்டுப்
பிரகாசிக்கும் கிரணங்கள் உதிர். உதிர்வதுபோற் சொரியும். பிதிர் -
கலையையுடைய. மதியவர் - சந்திரனையுடையவராகிய சிவபெருமான்.
வீழிமிழலை:- சந்தம் நோக்கி நெடில் முதல் குறுகியது.
|