3720. |
நீரணி
மலர்மிசை யுறைபவ னிறைகட |
|
லுறுதுயில்
நாரண னெனவிவ ரிருவரு நறுமல
ரடிமுடி
ஓருணர்
வினர்செல லுறலரு முருவினொ
டொளிதிகழ்
வீரண ருறைவது வெறிகமழ் பொழில்விழி
மிழலையே. 9
|
9.
பொ-ரை: நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும்
பிரமனும், நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய
இவர்கள் இருவரும் இறைவனின்
நறுமணம் கமழும் மலர் போன்ற
திருவடியையும், மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற
ஒரே உணர்வினராய்ச் சென்றும், காணற்கு அரியவராய்ப்
பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த
சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
நீர் அணி - குளத்திற்கு அணியாகிய, மலர்மிசை -
தாமரை மலரில் (உறைபவன்). குளத்துக் கணியென்ப தாமரை
என்பதனால் நீரணி மலர் என்னப்பட்டது. நீர் - தானி யாகு
பெயராய்க் குளத்தைக் குறித்தது. நறுமலர் அடிமுடி - நறுமணமுள்ள
மலர்போன்ற அடியையும், மலரையணிந்த முடியையும், (நறுமலர்
அடிமுடி என்னும் தொடரில் அடையை அடியோடும் முடியோடும்
கூட்டுமாறு அமைந்திருத்தலின் அவ்வாறே கொள்க.) ஓர் - ஆராயும்.
(தேடிக்காண வேண்டும் என்னும்) உணர்வினர் -
அறிவுடையவர்களாய். மலர்உறைபவன் - நாரணன். அடிமுடி ஓர்
உணர்வினர் என்றிது எதிர் நிரனிறை. செலல் உறல் அரும் -
காண்பது நிற்க) அருகே செல்லத் தொடங்குவதற்கும் அரியதான,
உருவினோடு ஒளிதிகழ் - ஒளியாய் விளங்கிய. வீர அணர் - வீரம்
பொருந்தியவர். அணவுதல் - பொருந்துதல். வீரணர் - மரூஉ. இது
இறைவனின் முடிவிலாற்றலுடைமை கூறியவாறு.
|