3727. |
அந்தர
முழிதரு திரிபுர மொருநொடி |
|
யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி
வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி
மிடறினர்
செந்தழ னிறமுடை யடிகடம் வளநகர்
சேறையே. 5 |
5.
பொ-ரை: சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரி
புரங்களை ஒரு நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை
வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பூட்டி, திருமால், வாயு,
அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந் தழியுமாறு
செய்த வீரமிக்க வாலிபர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும்
கண்டத்தர். செந்தழல் போன்ற மேனியுடைய அவர் வீற்றிருந்தருளும்
வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அந்தரம் - ஆகாயத்தில். உழிதரு - சுற்றித்திரிந்த.
(திரிபுரம்) மந்தரம் - மலை (சிறப்புப்பெயர், பொதுப் பெயரைக்
குறித்தது) வரிசிலை - கட்டமைந்த வில். அதன் இடை - அதில்
(இடை ஏழனுருபு) பூட்டும்நாண். அரவு - பாம்பு ஆக. அரி
வாளியால்- திருமாலாகிய
அம்பால். அரி - காற்றையும்,
நெருப்பையும் குறிப்பதால் - சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபற்றி
அவ்விருபொருளும் கொண்டு, அம்பின் அடிப்பாகம் காற்று,
நுனிப்பாகம் நெருப்பு, இடைப்பாகம் திருமால் என விளங்க
வைத்தமை காண்க. வெந்து, அழிதர - அழிய. (எய்த) விடலையர் -
வாலிபர்.
|