3735. |
போதமர்
தருபுரி குழலெழின் |
|
மலைமகள்
பூணணி
சீதம தணிதரு முகிழிள
வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள்
ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 2 |
2.
பொ-ரை: மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப்பட்ட
கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம்
அணிந்து, குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த, அரும்பொத்த
இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும், நாத தத்துவம்
அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாறு இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட
ஏடுகளை மேலான அவருருவான
நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
கு-ரை:
போது அமர்தரு - மலர்கள் தங்கிய. புரி - பின்னிய
(குழல்). பூண் அணி - ஆபாரணத்தையணிந்த. சீதம் (அது) அணிதரு
- (இயல்பான குளிர்ச்சியோடு) சந்தனக் குழம்பையும் அணிந்த. சீதம்
-பண்பாகுபெயர். முகிழ் - அரும்பை ஒத்த, இள, வனம், முலை,
செறிதலின் அழுந்தத் தழுவப்படுதலால். நாதம் (அது) நாத தத்துவம்.
எழில் உரு - அழகிய உருவாகக்கொண்ட. அனைய - அத்தகைய
நள்ளாறர்தம். நாமம் - புகழாகிய இவை. மீ - மேலான. தமது -
தம்முடையதான. எரியிடில் - நெருப்பிலே இட்டால். பழுது இலை.
மெய்ம்மையே. நெருப்பு, சிவபெருமானுக் உரியதென்பது, தீத்தான்
உன் கண்ணிலே, தீத்தான் உன்கையிலே, தீத்தான் உன்றன் புன்
சிரிப்பிலே, தீத்தான் உன், மெய்யெல்லாம் புள்ளிருக்கு வேளூரா
என்ற காளமேகப் புலவர் தனிப்பாடலாலும், எரியுள் நின்று ஆடுவர்
என்பதாலும், அட்டமூர்த்தங்களுள் நெருப்பு ஒன்று ஆதலாலும்
அறிக.
|