3737. |
மைச்சணி
வரியரி நயனிதொன் |
|
மலைமகள்
பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை
யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகணள்
ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 4 |
4.
பொ-ரை: மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த
அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா
தேவியாரின் பரஞானம், அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த
ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி
கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை
அழகிய நெருப்பிலிட்டால் அவை
பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.
கு-ரை:
மைச்சு - மை அணியப்பெற்றதாய். மைத்து, என்பது
மைச்சு என்றாயது எழுத்துப் போலி. அணி - அழகிய. வரி -
ரேகையின். அரி - ஒழுங்கு பொருந்திய. நயனி - கண்களை
யுடையவராகிய. தொல்மகள் - பழமையான உமாதேவியார். பயன்
உறு - அபரஞான, பரஞானங்களாகப் பயன் தருதலை உடைய கச்சு
அணி. வனம் - அழகிய. (முலையோடு கலவலின்). நஞ்சு அணி -
விடத்தை அணிந்த. மிடறு உடை - கண்டத்தையுடைய. அடிகளாகிய
நள்ளாறர்தம் புகழ்களாகிய இவைகள் எரியினில் இடில் பழுதிலை.
|