3741. |
மன்னிய
வளரொளி மலைமகள் |
|
தளிர்நிற
மதமிகு
பொன்னியன் மணியணி கலசம
தனமுலை புணர்தலின்
தன்னியல்
தசமுக னெரியநள்
ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 8
|
8.
பொ-ரை: நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும்
மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய
கத்தூரியை அணியப்பெற்றனவாய், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட
பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய், கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப்
புணர்கின்றவரும்,
ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ்
நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு
நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை,
மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை
பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
கு-ரை:
மதம் மிகு - மான்மதமாகிய கத்தூரியை மிக
அணியப்பெற்ற. மதமென நின்றது முதற்குறை. பொன்னியல் -
பொன்னாலியன்ற. புணர்தலின் - தழுவுதலால். தன் இயல் - தீமை
செய்வதில் தன்னைத்தானே யொத்த. தசமுகன் - இராவணன் நெரிய
அடர்த்த நள்ளாறர். அடர்த்த என்ற சொல், வருவித்துரைக்கப்பட்டது. மின் இயல் -
ஒளியையுடைய.
|