| 
         
          | 3756. | திருந்துமா 
            களிற்றிள மருப்பொடு |   
          |  | திரண்மணிச் 
            சந்தமுந்திக் குருந்துமா குரவமுங் குடசமும்
 பீலியுஞ் சுமந்துகொண்டு
 நிரந்துமா வயல்புகு நீடுகோட்
 டாறுசூழ் கொச்சைமேவிப்
 பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ்
 நெஞ்சமே புகலதாமே.                 1
 |       1. 
        பொ-ரை: நெஞ்சமே! அழகான இளயானைத் தந்தங்களோடு, திரட்சியான இரத்தினங்களையும், 
        சந்தன மரங்களையும் அடித்துக் கொண்டு, குருந்து, மா, குரவம், குடசம் முதலிய மரவகைகளையும்,
 மயிலின் தோகைகளையும் சுமந்து கொண்டு பரவி, பெரிய வயல்களில் பாய்கின்ற நெடிய 
        கரைகளையுடைய காவிரி நதி சூழும்
 திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி
 வீற்றிருந்தருளும் சிவபெருமானின் அழகிய திருவடிகளைப் போற்றி
 வாழ்வாயாக! அத்திருவடியே நமக்குச் சரண்புகும் இடமாகும்.
       கு-ரை: 
        திருந்தும் - திருத்தமான, அழகான என்றபடி. இளம் மருப்பு - இளந்தந்தம். திரள் - திரட்சியான. மணி -
 இரத்தினங்களையும். சந்தம் - சந்தன மரங்களையும். உந்தி -
 அடித்துக்கொண்டு. குருந்து, குரவம், குடசம் - மலை 
        மல்லிகை
 முதலிய மரவகைகளையும். பீலியும் - மயில் தோகைகளையும். நிரந்து
 - பரவி. நீடுகோட்டு ஆறு சூழ் - நெடிய கரைகளையுடைய காவிரி
 நதி சூழும். (கொச்சைவயம்) மேவிப் பொருந்தினார் - விரும்பித்
 தங்கியருளிய பெருமானின், (திருந்து 
        அடிகளை நெஞ்சமே போற்றி
 வாழ்வாயாக). அது புகல் ஆம் - அத்திருவடி நமக்குச் சரண்புகும்
 இடமாம். கோட்டாறு.
 |