3757. |
ஏலமா
ரிலவமோ டினமலர்த் |
|
தொகுதியா
யெங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி
கொன்றையுங் கொண்டுகோட்டா
றாலியா வயல்புகு மணிதரு
கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினைமட
நெஞ்சமே யஞ்சனீயே. 2 |
2.
பொ-ரை: மடநெஞ்சமே! மணம் கமழும் ஏலம், இலவங்கம்
இவைகளோடு நறுமணம் கமழும் மலர்களையும் தள்ளிக் கொண்டு,
அழகிய மிளகுக் கொடிகளோடு, நன்கு பழுத்த கனிகள், கொன்றை
மலர்கள் ஆகியவற்றை அலைகள் வாயிலாக அடித்துக் கொண்டு
ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் நீர் வயல்களில் புகுகின்ற
அழகிய திருக்கொச்சைவயம் என்னும் இத்திருத்தலத்தை விரும்பி
வீற்றிருந்தருளும் நீலகண்டரான சிவபெருமானை நினைப்பாயாக! நீ
அஞ்சாதே.
கு-ரை:
நுந்தி - தள்ளிக்கொண்டு. கோலம் ஆம் - அழகாகிய.
ஆலியா - ஆலித்து, ஆரவாரித்து. (கோட்டாறு வயல்புகும்
கொச்சையே) நச்சி - விரும்பி. நீலம் ஆர் கண்டனை நினை,
அஞ்சிய தேவர்களைக் காத்தமை காட்டும் கண்டம் அது. ஆகையால் நெஞ்சமே நீ அஞ்சுதல்
ஒழிவாயாக.
|