3759. |
கந்தமார்
கேதகைச் சந்தனக் |
|
காடுசூழ்
கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக்
குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள்கோட்
டாறுசூழ் கொச்சைமேய
எந்தையா ரடிநினைந் துய்யலாம்
நெஞ்சமே யஞ்சனீயே. 4 |
4.
பொ-ரை: நெஞ்சமே! மணம் பொருந்திய தாழை, சந்தனக்
காடு என்பவற்றைச் சூழ்ந்து, வாழைத் தோட்டங்களின் பக்கமாக
வந்து, மா மரத்தையும், வள்ளிக் கொடியின் திரளையும், மொய்க்கும்
வண்டுகளையும் குவளையையும் மோதி ஓட, பூங்கொத்துக்கள்
அணிந்த நீண்ட கூந்தலையுடைய பெண்கள் குதித்துக் கொண்ட
நீராடும் காவிரி நதி சூழ்ந்த திருக்கொச்சைவயம் என்னும்
திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளிய எந்தையாரான
சிவபெருமானின் திருவடிகளைத் தியானித்து நாம் உய்தி பெறலாம். நீ
அஞ்சவேண்டா.
கு-ரை:
கேதகை - தாழை. கதலி மாடு - வாழையின் பக்கம்.
வள்ளையின்பவர் - வள்ளைக் கொடியின் திரளையும்,
அளிக்குவளையை - (மொய்க்கும்) வண்டுகளையுடைய
குவளையையும்.சாடி - மோதி. கொந்து - பூங்கொத்து. வார் - நெடிய.
|