3770. |
கரும்பன
வரிசிலைப் பெருந்தகைக் |
|
காமனைக்
கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன
வனமுலை யரிவையொ
டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 4
|
4.
பொ-ரை: இறைவன் கரும்பு வில்லையுடைய
பெருந்தகையாகிய மன்மதனின் அழகிய உடலை அழித்தவர்.
வண்டுகள் மொய்க்கும், தேன் மணம் கமழும் தூய கொன்றை
மலரை அழகிய ஒளிமிக்க சடைமுடியில் அணிந்தவர். அவர் தாமரை
மொட்டுப் போன்று அழகிய கொங்கைகளை உடைய உமா
தேவியோடு பகலில் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருத்துருத்தி
என்னும் திருத்தலமாகும். அவரே இரவில் வீற்றிருந்தருளுவது
திருவேள்விக்குடி என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அ(ன்)ன கரும்பு வரிசிலைக்காமன் - கரும்பாகிய
கட்டமைந்த அத்தகைய வில்லையுடைய மன்மதன், பெருந்தகைக்
காமன், கவின் அழித்த - அழகிய உடலை அழித்த, உடலைக்கவின்
என்றது தானியாகு பெயர், அரும்பு - தாமரையரும்பு, கோங்கின்
அரும்புமாம். தனக்கு இறுதி நேர்வதோர்ந்தும், தேவர்கள் துயர்
தீர்தலைக் கருதி யிறைவன் மேற்சென்றமையிற் பெருந்தகைக் காமன்
என்றார்.
|