| 
         
          | 3772. | பொறியுலா 
            மடுபுலி யுரிவையர் |   
          |  | வரியராப் 
            பூண்டிலங்கும் நெறியுலாம் பலிகொளு நீர்மையர்
 சீர்மையை நினைப்பரியார்
 மறியுலாங் கையினர் மங்கையொ
 டொருபக லமர்ந்தபிரான்
 வெறியுலாந் துருத்தியா ரிரவிடத்
 துறைவர்வேள் விக்குடியே.             6
 |  
            6. 
        பொ-ரை: சிவபெருமான் வரிகளையுடைய கொல்லும் தன்மையுடைய புலித்தோலாடை அணிந்தவர். நெடிய பாம்பை
 ஆபரணமாகப் பூண்டவர். பிச்சை எடுப்பதை நெறியாகக்
 கொண்டதன்மையர். இத்தகைய எளிமை உடையவர் ஆயினும்,
 எவராலும் நினைத்துப் பார்ப்பதற்கும் அரிய பெருமையுடையவர்.
 மான்கன்று ஏந்திய கையினர். அத்தகைய பெருமான் உமா
 தேவியாரோடு பகலில் நறுமணம் கமழும் திருத்துருத்தி என்னும்
 திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி என்னும் திருத்
 தலத்திலும் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        கீற்றுக்களையுடைய, கொல்லும், புலித்தோலுடையவராய், நெடிய பாம்பை அணியாக அணிந்து வீதியில்
 திரிந்து, ஏற்பதாகிய பிச்சைத் தன்மையுடையவர். அத்தகு
 எளியவராயினும், தமது பெருமையினை நினைப்பினும்
 அறியமுடியாதவர், மறி - மான்கன்று. வெறி - வாசனை.
 |